சந்திரனும்இ சூரியனும் எல்லையாக – எனினும் மனச்சாட்சிக்கு கடடுப்பட்டு:
ப+ச்சியத்திலிருந்து ஆரம்பித்த “கவேஷண” அறைகூவல்மிக்க அப்பயணத்தின் முக்கியமான ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளது. எனினும்இ எமது எல்லைஇ சந்திரன் – சூரியன் போன்ற நீண்ட பயணம் என்பதை நாம் நன்கு அறிவோம். காரணம் அறிவைத் தேடிச் செல்லும் அப்பயணம் நீண்டதுஇ பரந்தது. அந்நீண்ட பயணத்தில் அறிவூக்கு உரிமை கோருதலும் அல்லது அவற்றின் நாற்புற எல்லைகளையூம் தேடுதலும் என்பது ஒடுங்கிய வரையறையினுள் முடங்கியிருத்தலாகும் என நாம் நாம்புகிறௌம். அறிவூ வானத்திலிருந்து விழவூமில்லைஇ தனித்தனி ஆட்கள் சிலரின் தலைகளில் தானாகப் பிறந்துவிடவூமில்லை என்பதை நாம் விளங்கியூள்ளமையே அதற்கான காரணமாகும். குறுகிய வாழ்க்கைக்; காலத்துள் நாம் ஒவ்வொருவரும் சார்பளவிலான ஒரு பங்களிப்பையே செய்ய முடிமாகையால் இருக்கும் அறிவை மேன்மேலும் விருத்தி செய்வதும்இ கூட்டாகப் புத்தறிவைப் போசிப்பதுமே நாம் ஒவ்வொருவரும் செய்யத்தக்கதாகும்.
எனினும் வணிகமயமாகியூள்ள பூகோளகமயமாக்கம் என்றழைக்கப்படும் ஒன்றுக்குள் அறிவூம் வணிகமயமாகியூள்ளது என்பது உண்மை. உண்மையான அர்த்தத்தில் நோக்குமிடத்து “அறிவூ” என்பது விலை குறிக்கத்தக்க ஒரு வணிகப் பண்டமல்ல. மாறாக அது மனித வருக்கத்தின் நன்மைக்கான ஒரு சிறந்த முதலீடு மட்டுமே என்பதை விளங்கிக்கொள்ள சில கல்விமானகள் கூட தவறியூள்ளமை கவலைக்குரியதாகும்.
எனினும்இ இருக்கும் அறிவை ஃ புத்தறிவை ஒட்டுமொத்த சமூகத்தின் வளமாக எதிர்காலப் பயணத்துக்காவே முதலீடு செய்தல் வேண்டும் என்பதையூம் அறிவூ முதலீட்டை அதிகாரத்துவமாக ஆக்;கிக்கொள்ளும் குறுகிய எதிர்பார்ப்புடன் செய்தலாகாது என்பதையூம் வலியூறுத்த வேண்டியூள்ளது. எனவே மனச்சாட்சிக்கு அமைவாகவே அறிவை முதலீடு செய்தல் வேண்டும் என்பதை வலியூறுத்த வேண்டியூள்ளது.
எனினும்இ அறிவை முதலீடாக மாற்றும் கருமத்தில் தமக்கும் ஃ தனித்தனி ஆட்களுக்கும் ஏதேனுமொன்று “அதில் அடங்கியிருத்தல் ஆகாது” எனும் அடிப்படையே நாம் வலியூத்தவில்லை என்பதையூம் குறிப்பிட வேண்டியூள்ளது. எனினும் “தாம்” என்பதற்கு அப்பால் சிந்திக்கத்தக்கஇ எளிமையாக கூறுவதானால் அடிவானுக்கு அப்பால் நோக்கக்கூடிய புத்தறிவை நாடிச் செல்கின்ற ஒரு சந்ததியின் தேவை முன்னெப்போதுமில்லாத அளவூக்குத் தோன்றியூள்ளது.
“நான்” என்பதற்குப் பதிலாக “நாம்” எனச் சிந்திக்கத்தக்க மனிதரின் கைகளில் அறிவூ தவழ்வதைக் காண்பதே எனது ஒரே பிரார்த்தனை என்பதை ஈண்டு குறிப்பிடுகின்றௌம்.
இந்தஇ தூய எண்ணத்துடனேயே “கவேஷண” ஆரம்பிக்கப்பட்டதுஇ அப்பயணத்தில் நாம் மிகச்; சிறுபான்மையினர் என்பதை நாம் அறிந்து வைத்திருந்தோம். எனினும்இ பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் “கவேஷண” தொடங்கிய இடத்திலிருந்து நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளதோடுஇ எமது அச்சிறுபான்மையினர்இ இனியூம் சிறுபான்மையினர் அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம்.
தனித்தனியாக குறுகிய இலக்குகளை நாடிச் செல்லும் பயணமாகவன்றிஇ தேசியப் பணியொன்றினது இலக்குகளைத் தேடிச் செல்லும் வகையில் நாடெங்கும் பரம்பிய சுதேச ஆராய்ச்சிப் பண்பாடொன்றின் ஊடாக பரந்த புத்தறிவைத் தேடிச் செல்லும் ஒரு நாட்டினராக எமது இளந் தலைமுறையைத் தட்டியெழுப்பும் பணிக்காக முன்னிற்கும் “கவேஷண” எந்தவொரு நிபந்தனையின் கீழும் அப்பன்மைச் சொல்லுக்கு (கவேஷண ஸ்ரீ ஆய்வூகள்) விலைபேசத் தயாரில்லை என்பதையூம் வலியூறுத்த வேண்டியூள்ளது.
நேற்றும்இ இன்றும் நாளையூம் அது அவ்வாறாகவே இருத்தல் வேண்டும். அப்பன்மைச் சொல்லுக்கும் அதனைப் பின்தொடர்ந்து தேடிச் செல்லும் நீண்ட ஆய்வூ – ஆராய்ச்சிப் பண்பாட்டுக்குமாகவே “கவேஷண” குரல் கொடுக்கிறது என்பதை மீண்டும் வலியூத்துவதோடுஇ அறைகூவல்மிக்க அப்பயணத்தின் போது உங்களால் பயணிக்கத்தக்க அளவூக்கு எங்களுடன் தங்கியிருக்குமாறு அல்லது எம்முடன் இணைந்து கொள்ளுமாறு கண்ணியமாக வேண்டுகிறௌம்.
gaveshana 21