நல்ல பாடசாலைகளும் நல்லவை அல்லாத பாடசாலைகளும்
பாடசாலையானது சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகும். இலங்கையில் வெவ்வேறு மட்டங்களில் பாடசாலை தொடர்பாகப் பிரஸ்தாபிக்கப்படும் விடயங்கள் மூலம் இது தௌpவாகின்றது. நல்ல பாடசாலை என்பது எவ்வாறான ஒன்று எனப் பகுத்தாய்வது காலத்தின் தேவையாக உள்ளது. அது பாடசாலை தொடர்பான பிரச்சினைகள்இ தற்கால இலங்கையில் மாணவர் – ஆசிரியர் – அதிபர் – கல்வி அதிகாரிகள் – பெற்றௌர் ஆகியோரின் அறிவூஇ திறன்கள் மனப்பாங்குகளில் அதாவதுஇ தேர்ச்சிகளில் நேர் மற்றும் மறை அம்சங்களைப் பிரதிபலிப்பதே அதற்கான காரணமாகும்.
நகரமும் கட்டடங்களுமே நல்ல பாடசாலையின் குறியீடுகளாகும் என பெற்றௌர் காண்கின்றனர். எனினும் அப்பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றார்இ அப்பிள்ளைகள் பரீட்சைகளில் சித்திபெறச் செய்வதற்காக ‘ரியூ~ன்’ வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்துகின்றனர். எனவே நகரங்களில் சனரஞ்சகரமானவை எனப் பெயர் பெற்றுள்ள பாடசாலைகளின் எந்த ஓர் அதிபருக்கும் ஆசிரியருக்கும் தமது பாடசாலைப் பிள்ளைகள் பரீட்சைகளில் சித்தியடைவதற்கான காரணம் நாம் பெருமையூடன் தலைமைத்துவமேற்றுத் திளைக்கும் பாடசாலையே என தூய மனதுடன் கூறிவிட முடியாது. இக்கருத்;தின்படிஇ நோக்குகையில் நகரப் பாடசாலைகள் வெற்றிகரமானவையல்ல. எனினும் 13 ஆந் தர வகுப்புக்கு முறைமையாக வருகை தராத 80மூ வருகை எனும் தடையைத் தாண்டியூள்ளதாக மேற்படி நல்லவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள்இ நேர்மையூடனேயே சான்றுப்படுத்துகின்றனர் என நலன்நாடும் நோக்கில் எண்ணுவது இலவசக் கல்விக்குப் பொருத்தமானதாகும். பாடசாலைப்பண்பாட்டினாலும் பாடசாலையின் மறைந்த கலைத்திட்டத்தினாலும் நகரங்களில் உள்ள சனரஞ்சகமான பாடாசலை மாணவ – மாணவியரின் தேர்ச்சிகள் பட்டைதீட்டப்படும் என அனுமானிக்கலாம். எனினும் அது அவ்வாறாக நிகழுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியூள்ளது.
நல்ல பாடசாலை என்பது பாதகமான சூழல்களிலிருந்தும் வறுமைப்பட்ட வீடுகளிலிருந்தும் வருகை தரும் பிள்ளைகளுக்குக் கற்பிக்கத்தக்க பாடசாலையாகும். அவ்வாறான ஒரு பாடசாலையை விருத்தி செய்யூம் அதிபர் ஒரு நல்ல அதிபராவார். நல்ல ஆசிரியர்களாலேயே அவ்வாறான பிளளைகளுக்குக் கற்பிக்க முடியூம். எனினும் தெரிகடையான பிள்ளைகளுக்கு கற்பிக்க நேரிட்டுள்ளது என தற்கால ஆசிரியர்கள் அங்கலாய்க்கிறார்கள். சில தாய்மார் வெளிநாடு சென்றிருத்தல்இ தந்தைமார் குடிபோதைக்கு அடிமைப்பட்டிருத்தல்இ மாணவருக்கும் வழங்கப்படும் வீட்டு வேலைகளுக்கு பெற்றார் உதவி செய்யாமை போன்ற காரணங்களாலே பிள்ளைகள் தெரிகடைகளாகிப் போயூள்ளனர் எனச் சிலர் தர்க்கிக்கின்றனர். “இவ்வாறான தனிச்சிறப்பான பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்காக எனது ஆசிரிய வகிபாகத்தை மாற்றியமைத்து ஒரு நல்ல ஆக்கியல்புள்ள ஆசிரியராக எவ்வாறு மாறலாம்” என்பது தொடர்பாகவே நல்ல ஆசிரியர் தருக்கித்தல் வேண்டும்.
இவ்வாறாக ஆக்கியல்புடன் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களும் அம்மாணவருக்குத் தோள்கொடுக்கும் வகையில் பாடசாலைகளைக் கட்டியெழுப்பும் அதிபர்களும் இலங்கையில் காணப்படுகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். நாம் அவர்களை மதிப்போம்! பாராட்டுவோம்!!!