குப்பைக் கூளங்களும் டெங்கும்.

டெங்கு நோய் பரவூவதற்கு பிரதான காரணமாகிய ஈடிசு ஈஜிப்ரை (Aedes aegypti) நுளம்புகள் பெருகுவது பெரும்பாலும் சிறிய நீர் நிலைகளில் அல்லது எம்மை சுற்றியூள்ள நீர் தேங்கும் இடங்களில் என நாம் அறிவோம். எனினும் டெங்கு றௌய் பற்றி நான் கவனம் செலுத்துவது நாம் வாழும் பிரதேசத்தில் டெங்கு  நோயாளி ஒருவர் அல்லது டெங்கு காரணமாக ஒருவர் இறந்தமை பற்றி அறியூம் போது மாத்திரமாகும். அல்லது ஊடகங்கள் மூலம் டெங்கு நோய் பரவூதல் பற்றி அறியூம் போதாகும். நாம் மாத்திரமல்லாது மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கடமைப்பட்டுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் இவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் அவ்வாறு தான்.

இது பற்றி முதலில் அறிந்து கொள்ளும் குழுவாக அமைவது தொற்று நோய் பற்றிய ஆய்வூ நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுகின்ற பொது சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்கள்இ மத்திய அரசாங்கத்தின் தொற்று நோய் தடுப்பிற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோராவார். இவர்களுக்கு மேலதிகமாக டெங்கு நோய்க்குச் சிகிச்சைஅளிக்கின்ற தனியார் மற்றும் அரச மருத்துவ மனை ஊழியர்கள் டெங்கு நோய் பற்றிய ஆய்வூ கூட பரிசோதனைகளில் ஈடுபடுகின்ற பணிக் குழுவினரும் டெங்கு நோய் பரவூதல் பற்றிய குடம்பியியல் ஆய்வூகளில் ஈடுபடுகின்ற பணிக்குழவினர் ஆகியோரும் டெங்கு பரவூதல் பற்றி முன்னரேயே தகவல் அறிந்து கொள்கின்றனர்.

உரிய பிரதேசத்தில் டெங்கு நோய் பரவூதலைக் கட்டுப்படுத்தும் சுகாதார மற்றும் ஏனைய பணிக்குழுவினரை அறிவூறுத்தி தக்க நடவடிக்கைகளை எடு;ப்பது இப்பணிக்குழுவினரின் பொறுப்பாகும். இவ்வாறு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் மக்களை அறிவூறுத்துவதும் அவர்களது ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதும் மக்கள் சுகாதார சேவையின் ஒரு தவிர்க்க முடியாத சேவையொன்றாகும். இச் செயன்முறையின்போது இடைக்கிடையே நடைபெறும் கைத்தவறுகள்இ கவனியாது விடுபவைகள் மற்றும் குறைவான கவனிக்கப் படுபவைகள் காரணமாக டெங்கு நோய் தொற்று நோய் நிலையை அடைகின்றது.  அற்கு மேலதிகமாக காலத்திற்குக் காலம் கூடிக் குறைவாக உருவாகின்ற புதிய டெங்கு நோய் வைரசு பேதங்களினால் டெங்கு நோய் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவூகின்றது.

டெங்கு நோய்க்கு இன்றுவரை திட்டவட்டமான ஒரு தடுப்பு மருந்து கண்டறியப்பட வில்லை. ஆகவே நாம் எடுக்கக் கூடிய ஒரே நடவடிக்கை டெங்கு நோய் பரவூதல் தொடர்பாக உள்ள சகல தரவூகளையூம் சேகரித்து அவதானித்தல்இ ஆராய்தல் மற்றும் அதனடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை எடுப்பதாகும். டெங்கு கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய மேற்படி விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு  உரிய மக்கள் சுகாதார மருத்துவ உத்தியோகத்தரின் குழுவினருக்கும் அப்பிரதேச பொது மக்களுக்கும் உரித்தானதாகும். டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் பரவூவது நீர் தேங்கும் இடங்களிலாகையால் எமது சுற்றாடலில் உள்ள எந்த ஒரு நீர் தேங்கும் இடத்திலும் டெங்கு நுளம்புகள் பரவக் கூடுமாகையால் சமூகத்தில் வாழ்கின்ற நாம் யாவரும் டெங்கு நுளம்பு பரவூவதைக் கட்டுப்படுத்தாமைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

குப்பைக் கூளங்கள் அல்லது எம்மால் சுற்றாடலுக்கு விடுவிக்கும் திண்ம கழிவூகள்இ இச் செயன்முறையில் எவ்வாறு பங்களிக்கின்றது என ஆராய்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இற்றைக்கு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு சில நகர்ப் பிரதேசங்கள் தவிர பெரும்பாலான பிரதேசங்களின் வதிவாளர்கள் தம் வீடுகளின் குப்பைக் கூளங்களைத் தமது வீட்டின் வளவிலேயே குழியொன்றை வெட்டி அதில் சேகரிக்கவூம். இடைக்கிடையே அக்கிடங்கில் உள்ளவற்றைத் தீ வைக்கவூம் அவ்விடங்களிலிருந்து பெறப்படும் சாம்பார் மற்றும் மண்ணைத் தமது பயிர்களுக்கும் பூச் செடிகளுக்கும் இடுவதற்கும்; பழகியிருந்தனர்.

எனினும் 1978 இன் பின்னர் இலங்கையின் மக்கள் மத்தியில்; எற்பட்ட மாற்றங்கள் காரணமாக இச்செயன்முறை மாற்றமடைந்தது. பெரும்பாலான நகர்ப்புறங்களில் வீடுகளின் எண்ணிக்கையூம் சனத்தொகையூம் அதிகரித்தது. சிறிய காணித்துண்டில் முறையான அனுமதியூடன் அல்லது அனுமதியின்றி வீடுகள் கட்டப்பட்டன. தொடர் மாடி வீடுகள் உருவாகின. அதன் இறுதி விளைவாக மட்டுப்படுத்தப்பட்ட இடத்தி;ல் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதற்கு மேலதிகமாக விடுதிகள் ஹோட்டல்கள் விசேடமாக திடீர் உணவகங்கள் ஆகியன பெரும் எண்ணிக்கையில் உருவாகின.  அதே சமயம் ஏனைய விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையூம் அதிகரித்தன. பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தமையால்இ நாளாந்தம் பல்வேறு தேவைகளுக்காகவூம் நகரத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பொதுப் போக்கு வரத்து வசதிகள் அபிவிருத்தியடைவதற்கு பதிலாக தனிப்பட்ட வாகனங்களை நோக்கிச் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் நகர்ப்பிரதேசங்கள் பகல் வேளைகளில் சனநெருக்கடி நிறைந்ததாக காணப்பட்டன.

இதனால் நாளாந்தம் சுற்றாடலுக்கு வெளியேற்றும் கழிவூகளின் கனவளவூம் அதிகரித்தது. முன்னர் தாமே தமது வீட்டு வளவூகளில் ஒழுங்காக வீட்டை அண்டியதாக முகாமைத்துவம் செய்த மக்கள் திண்ம கழிவூகளை வேறு இடங்களுக்கு வெளியேற்றும் முறையப் பயின்றனர். இவ்வாறாக அகற்றப்படும் கழிவூகள் எவ்வகையிலும் பிரித்து வகைப்படுத்தப்பட வில்லை. மேலும் பிரிந்தழிதல் தவிர்ந்த வேறு எந்த ஒரு விதத்தில் மீண்டும் பயன்படுத்தப்படவோ மேலும் கழிவூகள் ஒன்று சேரும் நடைமுறை தவிர்க்கப்படவோ இல்லை.

எனினும் டெங்கு தொற்று பரவிய காலங்களில் உதாரணமாக 2004 இல் டெங்கு தொற்று நோய் நிலை ஏற்பட்டதன் பின்னர்இ சமுதாயத்தில் பல்வேறு தரத்தவர்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் கழிவூகளை முறையாக அகற்றும் மீள் சுற்றௌட்டம் பற்றி அக்கறை காட்ட ஆரம்பித்தனர். சில பிரதேச சபைகளும் நகர சபைகளும் திண்ம கழிவூகளை மீள் சுற்றௌட்டம் செய்வதில் அக்கறை காட்ட முன்வந்த அதே சமயம் கழித்தொதுக்கும் பிளாத்திக் கண்ணாடி  போன்றவற்றை மீள் சுற்றௌட்டம் செய்கின்றன நிலையங்கள்  உருவாயின.

எனினும் பின்னர் கழிவூகளை சேகரித்தலும் அகற்றுதலும் பணம் உழைக்கும் மிகச் சிறந்த வழியாக மாறிய அதேசமயம்; அரசியல்வாதிகளின் தலையீட்டினால் கழிவூகளை அகற்றும் இடங்களில் வலோத்தகாரமாக கழிவூகளை கொட்டுதல் வரையான நடைமுறை செயற்படுத்தப்படலாயிற்று. வருடாந்தம் உள்ளுராட்சி சபைகள் மூலம் ஒப்;பந்த அடிப்படையில் கழிவூகளை அகற்ற ஒப்படைக்கப் பட்ட அதேசமயம் அது தமது அரசியல் அபிமானிகளுக்கு வருமானம் உழைக்கும் செயன்முறையொன்றாக மாறியது. வீடுகளில்  ஒன்று சேரும் கழிவூகளை அவற்றை சேகரிக்க வருகின்ற ஊழியர்களுக்கு ஒப்படைத்து விட்டு மக்கள் அப் பணிகளிலிருந்து விலகியிருந்தார்கள். கழிவூகளை அகற்றல் உள்ளுராட்சி நிறுவனங்களின்; நாளாந்த பணியாக மாறியது.

அண்மையில் நடைபெற்ற மீதொடமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்த நிகழ்வூ நடைபெறாதிருப்பின் நாட்டு மக்கள் என்ற ரீதியில் நாம் தொடர்ந்தும் இச்செயன்முறையில் ஈடுபட்டிருப்போம். மேலும் குப்பை மேடுகளை உருவாக்கியபடி இருத்தல் இப்பிரச்சினைக்கான தீர்வாக அமைய மாட்டாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தேரந்தெடுத்த இடங்களில் குப்பைகளைக் கொட்டும் நடைமுறையானது திண்ம கழிவூகளை அகற்றும் நடைமுறைக்குத் தீர்வூ என்ற கருத்து சமூகத்தில் வலுப் பெற்றரைமயால்இ

  • ஒன்று சேரும் கழிவூகளை அகற்றும் செயற்பாடானது உள்ளுராட்சி சபைகளின் பொறுப்பெனவூம்; அவை தமது பொறுப்பல்ல எனவூம் பொது மக்கள்; கருதப் பழகுதல்
  • உள்ளுராட்சி நிறுவனங்கள் அவற்றை தமது ஆதரவாளர்களுக்கு பணம் உழைக்கும் வழிமுறையொன்றாக பயன்படுத்தல்

 

இதனால் உள்ளுராட்சி மன்றங்களினால் குப்பைகளை முறையாக அகற்ற முடியாமற் போன சமயங்களில் குப்பை கூளங்கள் ஒன்று சேர்தல் ஒரு இயல்பான காட்சியாக விருந்தது. அதேசமயம் வேறு எவரும் அதற்கான பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. பெரும்பாலானோர் உரிய உள்ளுராட்சி சபைகளை அல்லது அரசைக் குற்றஞ் சாட்டுவதில் மாத்திரம் ஈடுபட்டனர். அவர்கள் குப்பைகளைக் கொட்டும் இடங்களில் எப்போதும் குப்பை இருக்க வேண்டும் எனக் கருதினர். அதன் விளைவூகள்; தொடர்பாக எவ்வித அக்கறையையூம் அவர்கள் காட்டவில்லை. உள்ளுராட்சி சபைகளினால் குப்பை கூளங்களை எடுத்துச் செல்லாத சமயங்களில் வீடுகளில் வசிப்பவர்கள் தமது வீடுகளைச் சுற்றியூள்ள குப்பைகூளங்களை அகற்றுவதைப்; பிற்போட்டனர். குப்பைகளை எடுத்துச் செல்லும் சமயங்களில் மாத்திரம் குப்பைகளை வெளியில் கொட்ட முற்பட்டனர்.

டெங்கு நோயைப் பரப்பும் ஈடிசு ஈஜிப்பரசுஇ ஈடிசு எல்போ பிக்டசு ஆகியவற்றிற்கு இவ்விடங்கள் வசிப்பிடங்களாக மாறின. காலத்திற்குக் காலம் டெங்கு நோய் கடுமையாகப் பரவியது. நீர் தேங்கும் எந்த ஒரு இடத்திலும் நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்பு உள்ளமையால் நாம் இப்போது உருவாக்கிய இத்திண்ம கழிவூகளைக் கொட்டும் இடங்களைச்  சுற்றியூள்ள வீடுகளில் நுளம்புகளின் அடர்த்தி பெரிதும் அதிகரித்தது.

ஆகையால் குப்பைகளை அகற்றவதற்கான இறுதித் தீர்வாக அமைய வேண்டியது முறையாக குறித்த திண்மக் கழிவூகளை மீள்சுற்றௌட்டம் செய்வது மாத்திரமாகும். வீடுகளில் ஒன்று  சேரும் திண்மக் கழிவூகளை வகைப்படுத்தி அகற்ற வேண்டிய கழிவூகளை வேறாக்கிக் கொள்ள வேண்டிய அதே சமயம் தேர்ந்தெடுத்த இடங்களிலும் இடவசதியூள்ள எல்லா சுற்றாடல்களிலும் ஒரு பகுதியை கூட்டெரு முறையில் பிரிந்தழியூம் பொருட்களை அகற்றத் தேர்ந்தெடுத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும். உள்ளுராட்சி சபைகளின் பொறுப்பு மீள் சுற்றௌட்டம் செய்யக்கூடிய  குப்பைகளை மீள் சுற்றௌட்டம் செய்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதும் வசதியூள்ள எல்லா வீட்டுக்கும் அல்லது வீட்டுத் தொகுதிக்கும் பிரிந்தழியூம் கழிவூகளை அகற்றுவதற்கான கொம்போஸ்ட் பாத்திரங்களை அறிமுகம் செய்தலும் அது தொடர்பான பொறுப்பைத் தாம் எற்றுக் கொண்டு திட்டவட்டமான வேலைத்திட்டமொன்றைத்  ஏற்பாடு செய்வதுமாகும். அவ்வாறாயின் குப்பைகளை வளமாக மாற்ற முடிகின்ற அதே சமயம் டெங்கு நோய் உட்பட நுளம்புகள்இ ஈக்கள் ஆகியவற்றினால் பரவூம் நோய்களைக் கட்டுப்படுத்தவூம் முடியூம்.

 

விசேட மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்ஹ

தொற்று நோய் விஞ்ஞானி (2003 -2008)

தொற்று நோய் தடுப்புப் பிரிவூ

சுகாதார அமைச்சு.