உள நோய்களின்போது ஏற்படும் நோயறிகுறிகளை விளங்கிக் கொள்ளும் ஓர் எளிய முறையியல் உள்ளது. அதாது நபரின் உணர்வூகள்இ சிந்தனைகள்இ நடத்தைக் கோலங்கள் ஆகியற்றை முதலில் இனங்காண்பதாகும். உதாரணமாக நாம் யாவருக்கும் துக்கம் எற்படும். மகிழ்ச்சி ஏற்படும். பயம் தோன்றும்இ கோபம் ஏற்படும்;. சந்தேகங்கள் தோன்றும். இவை யாவூம் உணர்ச்சிகளாகும். அது போன்றே சிலர் குழப்பமடைவர். சிலர் வெட்கமுறுவர். வேறு சிலர் தம் வேலைகளை மிகவூம் நேர்த்தியான முறையில் செய்வர். இவை யாவூம் மனித இயல்புகளாகும். எனினும் அவை அளவிலும் பண்பிலும் வேறுபட்டவை.
இத்தகைய இயல்புகள் குறித்த நபரினதோ மற்றொருவரினதோ வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையூமாயின் அது நோயறிகுறியாக மாறும்.
சோகம் தோன்றுவது இயற்கையானது. எனினும் ஒரு நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களினுள் எழும் சோகம் டூளுயனநௌளரூ வித்தியாசமானது. அதுஇ அதன் அளவூஇ விதம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும். அவ்வாறு அளவில் சமமற்ற விதமாக அதிகரிக்கும் சோகம் நோயறிகுறியாக மாறக் கூடும். இதனை ஆங்கிலத்தில் ஆளைநசல என்பர். இது சாதாரண மனதுடைவூஇ முகச்சோர்வூ ஆகியவற்றைத் தாண்டிய மனதுடைவாகும். முகச் சோர்வையையூம் கடந்த ஒரு உள நிலையாகும்.
அத்துடன் வேறு சில நோயறிகுறிகளும் தோன்றும். இதன்போது ஏற்படும் பிரதான பாதிப்பு நடத்தைகள் யாவூம் மந்த கதியை அடைதலாகும். அதாவது சிந்தனைகள் மந்த நிலையை அடையூம். ஞாபக சக்தி குறைவடையூம். செயற்படும் ஆற்றல் குறைவடையூம். சிந்தனை எதிர்மறையாக மாறும். பாதகமான சிந்தனைகள் எழும். எதிர்பார்ப்புக்கள் இழக்கப்படும்.
இவை யாவற்றினாலும் அவர்களது வாழ்க்கைக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். அன்றாட நிகழ்வூகள் முன்னரைப் போன்று நடைபெற மாட்டாது. தன்னைப் பற்றியூம் ஏனையோரைப் பற்றியூம் உள்ள அக்கறைகளும் கவனமும் குறைவடையூம். தனது தோற்றம் பற்றிய அக்கறையூம் குறையூம்.
இந்நிலையை நன்கு விளங்கிக் கொள்ள உதவூம் ஒரு சிறந்த உதாரணம் ஒருவரது இறப்பின்போது நமக்கு ஏற்படும் சோகத்ததைக் குறிப்பிடலாம். இந்நிலையை மேலும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். உங்களுக்குத் தெரிந்த உற்சாகமான ஒருவர் சிறிது சிறிதாக உற்சாகத்தை இழந்த நிலையை அடைவாராயின் அவர் தனது அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாகக் காட்டும் அக்கறை குறைவடையூமாயின் சிரித்து மகிழ்;ச்சியாக கழிக்கும் நேரம் குறைவடையூமாயின் ஏனையோருடன் கலகலப்பாக இருத்தல் குறையூமாயின் பெரும்பாலும் அது மனச் சோர்வினால் ஏற்படுவதாகும்.
மேலும் உணவில் விருப்புக் குறைவடைதலும்இ தூக்கமின்மையூம் ஏற்படும். எனினும் எரிச்சலும் கோபமும் அதிகரிக்கும். உங்கள் நண்பர்இ நெருக்கமானவர்;இ சகோதரர்இ பிள்ளைகள்இ பெற்றௌர் ஆகிய யாராவது இவ்வாறான மாற்றங்களைக் காட்டுவாராயின் நீங்கள் செய்ய வேண்டியது அவரை மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக முற்படுத்துவதாகும். அவர் உள நோய்கள் தொடர்பான மருத்துவராயின் அது மிகச் சிறந்தது. எனினும் குறைந்தது ஒரு சராசரி மருத்துவரிடமாவது அவரைக் காட்டுதல் மிக முக்கியமானது.
மனச் சோர்விற்கு சிகிச்சைகள்; உண்டா? ‘ஆம்’ என்பது தான் அதற்கான தௌpவான விடை. இவர்கள் யாவருக்கும் வில்லைகள் குளுசைகள் மருந்துகள் கட்டாயமாக வழங்க வேண்டுமா? ‘இல்லை’. இதன் கருத்து சிகிச்சை தேவை இல்லை என்பதல்ல.
சிறிய அளவில் மனச் சோர்வூ ஏற்பட்டுள்ள ஒருவருக்கு மருந்து தேவையில்லை. உள மருத்துவ சிகிச்சை அல்லது அறிவூ சார் நடத்தை சிகிச்சை (Cognitive behavior therapy )இதற்குப் போதுமானது.
நடுத்தர அளவூ மனச் சோர்வூள்ள ஒருவருக்கு மேற்படி பரிகார முறைகள் இரண்டும் அவசியமாகும். எனினும் அவர்கள் மருத்துவ மனையில் சேர்ந்து சிகிச்சை பெறல் கட்டாயமல்ல. கடுமையான மனச் சோர்வூள்ளவர்களுக்கு மேற்படி இரண்டு முறைகளும் அவசியமாகும் அதே சமயம் மருத்துவ மனையில் சேர்ப்பதும் கட்டாயமானதாகும்.
அவர்களில் சிலரினுள் வாழ்வது பயனற்றது என்ற சிந்தனை தோன்றுமாகையால் உயிர் பாதுகாப்பு பற்றியூம் சிந்தித்தல் அவசியமாகும். உடல் நோய்களைப் போன்றே உள நோய்களும் யாவருக்கும் ஏற்படக் கூடியவையாகும் அதனைப் பற்றி தயக்கம் காட்டத் தேiயில்லை. ஏனெனில் அவைகளையூம் குணமாக்க முடியூம். மனச் சோர்வூம் குணமாக்கக் கூடிய நோயொன்றாகும்.
உள சுகாதாரம் தொடர்பான பேராசிரியர் அதுல சுமதிபால