சுகாதாரம் சார்ந்த ஆய்வூகளில் நோயாளிகள்  மற்றும் பொதுமக்களின் ஈடுபாட்டை இலங்கைக்கு அறிமுகம் செய்தல்

இன்றுஇ மாறிவரும் சமுதாயம் மற்றும் உடல்நலம் சார்ந்த சேவைகள் மீதான அழுத்தங்கள் என்பன காரணமாகஇ நோயாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவதற்கும்இ சேவைகளை மேம்படுத்துவதற்கும்இ சான்றுகள் மற்றும் சிகிச்சை முறைகளை கண்டறிவதற்குஇ ஆய்வூகள் நடாத்தப்படுவது அவசியமாகவூள்ளது.

 

ஜூலை 2018 இல் இலங்கை மருத்துவ சங்கத்தின் (SLMA) பேரவைக்கு முன்னதாக நடாத்தப்பட்ட செயலமர்வில்இ சர்வதேசமட்டத்தில் பிரசித்தி பெற்றஇ ‘சுகாதாரம் சார்ந்த ஆய்வூகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஈடுபாடு’ (PPIE) எனப்படும் எண்ணக்கருவானது முதன்முறையாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் (Institute for Research and Development -IRD) இலங்கைக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது.

 

சிறந்த கருத்துகளையூம்இ நல்ல நடைமுறைகளையூம் அறிமுகப்படுத்த முடியூம். எவ்வாறாயினும்இ இந்த முன்னெடுப்பை செயல்படுத்துவதற்கான ஒரு சிறந்த புலத்தையூம்இ அதை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு பொறிமுறையையூம் அடையாளம் காண்பதே உண்மையான சவால்.

 

IRD ஆனது இதனை செயல்படுத்த இரு முனை மூலோபாயத்தை முன்மொழிகிறது.

 

முதலாவதாகஇ ஆய்வூ நெறிமுறை மீளாய்வூக்குழு உறுப்பினர்கள் என்ற வகையில்இ ஆய்வூகளின் நிகழ்ச்சி நிரலை இயக்குபவர்களாக மட்டுமன்றிஇ ஆய்வூ முன்மொழிவூகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கும் பொறுப்பாக இருக்கும்  மூத்த விஞ்ஞானிகளுக்கு PPIE என்ற கருப்பொருளை அறிமுகப்படுத்துதல் வேண்டும்.

 

நோயாளிகளையூம் பொதுமக்களையூம் இவ்விடயத்தை உணரச்செய்வது இரண்டாவது உத்தி ஆகும். இதற்கு  முதன்மையாக வெகுசன ஊடகங்களைப் பயன்படுத்தலாம்.

 

இலங்கை பல்கலைக்கழகங்கள்இ முன்னணி மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சுகாதாரம் சார்ந்த கல்வி நிறுவனங்களின் நெறிமுறை மீளாய்வூக்குழுக்களுடன் IRD வெற்றிகரமாக தொடர்புகளை நிலைநாட்டி உள்ளது.

நெறிமுறை மீளாய்வூக்குழு உறுப்பினர்கள் உற்சாகமளிக்கும் பதில்களை எமக்கு அளித்திருந்தனர். மேலும் 2018/2019 க்குள் IRD இனால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று செயலமர்வூகளில் அவர்கள் கலந்துகொண்டுஇ சர்வதேச PPIE நிபுணர்களுடன் அறிவை பகிர்ந்து கொள்ளவூம் கற்றுக்கொள்ளவூம் முடிந்தது. IRD இனால் ஒன்றிணைக்கப்பட்ட நிபுணத்துவக் குழாம்இ பல கூட்டுமுயற்சிகளையூம்இ உயிர்ப்புள்ள ஆக்கபூர்வமான விவாதங்களையூம் தூண்டியது.

 

IRD PPIE சிறு குழாம் எனப்படும் இணையத்தின் மூலம் இணைக்கப்படும் வலையமைப்பொன்றை ஐசுனு பேணி வருகின்றது.  இதில் பங்குபெறுவோர் PPIE இன் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்து அறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். சட்டம்இ மனித உரிமைகள்இ மாற்று வலுவூள்ளோர் தொடர்பான கற்கை மற்றும் மருத்துவ அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.

2018/2019 ஆம் ஆண்டில் IRD ஆனது இலங்கையின் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலமாக PPIE என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தவூம்இ பொதுமக்களை பெருமளவில் ஈடுபடுத்தவூம் விளைந்தது. இதுதொடர்பில்இ குறிப்பாக ஊடக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாகஇ ஐசுனு நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. இது சம்மந்தமான ஆய்வூகளில் ஈடுபட ஆர்வமும் அர்ப்பணிப்புமுள்ள தன்னார்வத் தொண்டர்களை IRD அடையாளம் கண்டுள்ளது.

 

இருப்பினும்இ இதுபற்றிய கேள்விகளும் எம்மை வந்துசேர தவறவில்லை. ஒரு ஆராய்ச்சியாளர் ஏன் நோயாளிகளையூம் அவர்களின் கவனிப்பாளர்களையூம் ஆராய்ச்சி முயற்சியில் சம பங்காளிகளாக பங்களிக்குமாறு கேட்க வேண்டும்? உண்மையில்இ இந்த கருத்து ஐரோப்பாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதுஇ பலர் சந்தேகம் அடைந்தனர்இ விசாரித்தனர் – நோயாளிகள் மிகவூம் உணர்ச்சிவசப்படுவார்களா? விஞ்ஞான சிக்கல்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியூமா? அல்லதுஇ அவர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்கள் தொடர்பில் மிகவூம் ஈடுபாடு கொண்டிருப்பார்களா? இலங்கைக்கு இது ஒன்றும் விதிவிலக்கு இல்லை. சிலர் தொடர்ந்தும் கேள்விகளுடனேயே இருப்பர். எவ்வாறாயினும்இ PPIE தொடர்பான எமது அனுபவம் எங்கள் இரு உத்திகளையூம் நிரூபித்துள்ளதுஇ முதலில் மூத்த விஞ்ஞானிகளிடமும் பின்னர் பொது மக்களிடமும் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியூள்ளது.

 

சிறந்த ஆரோக்கியமும் உயர்ந்த வாழ்க்கைத் தரமும் கொண்ட பிரகாசமான எதிர்காலத்துக்குஇ நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் ஈடுபாட்டினால் ஏற்படக்கூடிய மேலதிக பெறுமதியை இலங்கை ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறௌம். ஆராய்ச்சி பங்கேற்பாளர்கள் இல்லாமல் ஆராய்ச்சி என்பதே இருக்காதுஇ அவர்களை வெறுமனே ஆராய்ச்சி பங்காளர்களாக பார்க்காமல்இ ஏன் கூட்டாளர்களாக மாற்றக்கூடாது?

 

(“சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பில் நோயாளிகள் மற்றும் பொது மக்களின் ஈடுபாடு மற்றும் பங்கேற்பும்: ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப்படுத்தலில் அதன் வகிபாகமும் தொடர்பும்” என்ற தலைப்பில்இ ஜூலை 22இ 2019 அன்றுஇ இலங்கை மருத்துவ சங்கத்தின் பேரவைக்கு முன்னதாக நடத்தப்பட்ட செயலமர்வில்  வழங்கப்பட்ட விளக்கவூரையிலிருந்து எடுக்கப்பட்டது)

 

மனோரி விமலசேகர

ஒருங்கிணைப்பாளர் – IRD PPIE நிபுணத்துவ குழு

தமிழ் மொழிபெயர்ப்பு : ப்ரெய்சி ஹனா பெனடிக்ற்